×

மதுரை-செகந்திராபாத் கோடை கால சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: மதுரையிலிருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்துக்கும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து மதுரைக்கும் கோடை கால சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு மத்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. ஐதராபாத் - மதுரை சிறப்பு ரயில் (07253) ஐதராபாத்தில் இருந்து இன்று பகல் 3.50 மணிக்கு புறப்பட்டு, நாளை மதியம் 2.40 மணிக்கு மதுரை வந்தடையும். அதேபோல செகந்திராபாத்திலிருந்து நாளை மாலை 5.40 மணியளவில் புறப்படும் ஹைதராபாத்-மதுரை சிறப்பு ரயில்(07254) நாளை மறுதினம் மாலை 4 மணிக்கு மதுரை வந்தடையும்.

இந்த ரயில்கள் திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், சட்டெனப்பள்ளி, மிரியால்குடா, நலகொண்டா ஆகிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 5 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 பொதுப்பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி இணைக்கப்படும்.

Tags : Madurai ,Secunderabad , Madurai-Secunderabad, Summer Special, Southern Railway
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...