×

கூடுதல் வரதட்சணை கேட்டு விரட்டியடிப்பு மனைவி பற்றி பேஸ்புக்கில் அவதூறு: கணவர், நண்பர் மீது வழக்கு

நாகை: நாகை கடைசல்கார தெருவை சேர்ந்தவர் சபீதா பேகம்(37). இவருக்கும் நாகை பொரவாச்சேரியை சேர்ந்த உமர்பாரூக்(42) என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது உமர் பாரூக்கிடம் சீர்வரிசையாக 40 பவுன் நகை, ரூ.60 ஆயிரத்தை சபீதாபேகம் குடும்பத்தினர் கொடுத்தனர். இந்நிலையில் வீட்டின் மேல் மாடி பகுதியை ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டி தருமாறு சபீதாபேகம் குடும்பத்தினரிடம் உமர் பாரூக் குடும்பத்தினர் கேட்டனர். இதற்கு சபிதாபேகம் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் சபீதாபேகத்தை கணவர் வீட்டில் இருந்து தாய் வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதன் பின்னர் கணவர் உமர்பாரூக் வெளிநாடு சென்று விட்டார். இதைதொடர்ந்து உமர்பாரூக், தனது நண்பரான பொரவாச்சேரியை சேர்ந்த முகமதுரியாஸ்(28) என்பவருடன் சேர்ந்து போலியான பேஸ்புக் முகவரியை ஏற்படுத்தினார். அதில் சபீதாபேகத்தின் புகைப்படத்தை பதிவு செய்து அதில் தவறான வார்த்தைகளை எழுதி அவமானம் ஏற்படும் வகையில் வெளியிட்டனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த சபீதாபேகம், நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நேற்று உமர்பாரூக், முகமதுரியாஸ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Facebook , Extra dowry, wife, libel on Facebook, lawsuit
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...