ஒன்றிய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

மதுரை: ஒன்றிய, மாநில உரிமையை மீறி நடவடிக்கை எடுக்க ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நிதியமைச்சர் இதனை தெரிவித்தார். பேரறிவாளன் வழக்கில் அளித்த தீர்ப்புக்கும், ஜி.எஸ்.டி. வழக்கில் அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு உள்ளது என்று குறிப்பிட்டார். 

Related Stories: