×

குஜராத்துடன் இன்று மோதல் பிளே ஆப் சுற்றில் நீடிக்க பெங்களூரு ஆயத்தம்

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள 67-வது லீக் போட்டியில்  பெங்களூரு, குஜராத்  அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. ரன்ரேட்டில் பின்தங்கி இருக்கும் பெங்களூரு  இன்றைய ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். அதே நேரத்தில் டெல்லி அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பையிடம் தோல்வியடைந்தால் அந்த அணி எவ்வித சிரமமும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். அதுமட்டுமில்லாமல் பெங்களூரு வெற்றி பெறும் பட்சத்தில் ஐதராபாத், பஞ்சாப் அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்பு பறிபோய்விடும்.

பெங்களூரு அணி தோற்றால் கிட்டத்தட்ட வெளியேற வேண்டிய சூழல்தான் வரும். எனவே இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கடும் நெருக்கடியில் பெங்களூரு களம் இறங்குகிறது. அறிமுக அணியான குஜராத் 20 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. எனவே அந்த அணி இன்று எந்தவித பதற்றமும் இன்றி ஆடும்.  ஏற்கெனவே குஜராத் அணி பெங்களூருக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. அதற்குபதிலடி கொடுத்து பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க பெங்களூரு அணி இன்று கடுமையாக மல்லுக்கட்ட ஆயத்தமாக உள்ளது. குஜராத்தும் எளிதில் விடாது என்பதே உண்மை.

Tags : Bangalore ,Gujarat , Gujarat, Play Off, Bangalore
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...