திருச்சி அருகே 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சி பறிமுதல்: சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி

துறையூர்: திருச்சி அருகே 150 கிலோ கெட்டுப்போன ஆட்டு இறைச்சியை சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரி மூர்த்தி, உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு செய்தனர். இதில் சிக்கம் பிள்ளையார் கோயில் அருகில் உள்ள காந்தி ரோட்டில் சுரேஷ் என்பவரின் கடையில் ஆய்வு செய்தபோது குளிர்சாதன பெட்டியில் கெட்டுப்போன ஆட்டிறைச்சி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து 150 கிலோ ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்ததுடன், சுரேசுக்கு ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும். கெட்டுப்போன, தரமற்ற இறைச்சிகளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories: