×

வேதாரண்யத்தில் தொடர்ந்து கடல் சீற்றம்: 1000க்கு மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பு.

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் 3வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த இரண்டு நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது பலத்த காற்றின் காரணமாக கடலில் அலைகள் உயரமாக எழுவதால் கடும் சீற்றமாக காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமா காணப்படுவதால் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட மீனவ கிராமகங்களில் 5000க்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.

இதனால் 1000க்கு மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. கடலில் உள்பகுதியில் காற்று பலமாக வீசுவதால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனிடையே 3வது நாளாக மீன்பிடிக்க செல்லததால் மீனவர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நேரத்தில் மீனவர்கள் வலைகள் மற்றும் படகுகளில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்லததால் மீன் ஏலக்கூடம் வெறிசோடி காணப்படுகிறது. கடல் சிற்றம் ஓரிரு நாட்களில் தணிந்த உடன் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.


Tags : Vadaranayna , Continuing sea rage in Vedaranyam, 1000 piper boats safely parked along the coast.
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை