பொன்மலை - திருவெறும்பூர் சுரங்கப்பாதை சீரமைப்பால் திருச்சி - மயிலாடுதுறை ரயில் சேவையில் 24ல் மாற்றம்..!!

சென்னை: பொன்மலை - திருவெறும்பூர் சுரங்கப்பாதை சீரமைப்பால் திருச்சி - மயிலாடுதுறை ரயில் சேவையில் 24ல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி பொன்மலை - திருவெறும்பூர் இடையே சுரங்கப்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. மயிலாடுதுறையில் இருந்து மே 24ம் தேதி காலை 8.15க்கு புறப்பட்டு திருச்சி செல்லும் விரைவு ரயில் (12633) தஞ்சையை அடையும். திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில் (12633) மே 24ம் தேதி தஞ்சையில் இருந்து பகல் 1.40 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: