நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை

நெல்லை: நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான் குளம் பகுதியில் விபத்து ஏற்பட்ட கல்குவாரியின் உரிமையாளர் அலுவலகங்களில் போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் கடந்த 14-ம் தேதி இரவில் பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் 6 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பேசும் பொருளாக தமிழகம் முழுவதும் பரவியது. கல்குவாரி விபத்தில் சிக்கிய 6 பேரில் 3 பேர் உயிரிழந்த நிலையில், இருவர் மீட்கப்பட்டு ஒருவரை மட்டும் தற்போது தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து  இந்த பகுதிகளில் முகாமிட்டு தேடி வருகின்றனர். 6-வது நபர் அடையாளம் காணப்பட்டு மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் போலீசார் குவாரி உரிமையாளர் செல்வராஜின் அலுவலகங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: