எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வதுடன் பேரறிவாளன் சந்திப்பு: தாய் அற்புதம்மாளுடன் சந்தித்து நன்றி தெரிவித்தார்..!

சென்னை : உச்ச நீதிமன்றத்தால் நேற்று விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தமிழக முன்னாள் முதல்வரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை, தனது தாய் அற்புதம்மாள் உடன் நேரில் சென்று சந்தித்தார். அப்போது தனது விடுதலைக்கு ஆதரவு அளித்ததற்காக பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார். அப்போது விடுதலையைத் தொடர்ந்து அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து பேரறிவாளனிடம் எடப்பாடி பழனிசாமி உரையாடினார். இதே போன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ பன்னீர் செல்வத்தையும் பேரறிவாளன் தனது குடும்பத்துடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம், பேரறிவாளனை விடுவிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஒரு மாநில முதலமைச்சருக்கு இருக்கும் உரிமை என்ன என்பதை பேரறிவாளன் விவகாரத்தில் சட்டமன்றத்தில் நிரூபித்து தீர்மானம் நிறைவேற்றியவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பபட்டது. அதற்கு முழு காரணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாதான். பல்வேறு கட்டங்களிளில் என்னென்ன தீர்மானம் எடுத்தார்கள் என்பதெல்லாம் ஒரு வரலாற்று உண்மை,என்று கூறினார்.

Related Stories: