பெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு : ஐகோர்ட் அதிரடி

சென்னை : பெற்றோர் குடியுரிமையை துறந்தாலும் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை பெற உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1998ம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்து சிங்கப்பூர் குடியுரிமையை பெற்றபோது, தாயின் வயிற்றில் 7.5 மாத சிசுவாக இருந்த பிரணவ் சீனிவாசன் என்பவர் மேஜர் ஆன பின்னர் 2017ம் ஆண்டு இந்திய குடியுரிமை கோரி சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்தார்.

ஆனால் பெற்றோர் இந்திய குடியுரிமையை இழந்துவிட்டதால் பிரணவ் இந்திய குடியுரிமையை துறந்துவிட்டதாக அவருக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது என ஒன்றிய உள்துறை அமைச்சகம் விண்ணப்பத்தை நிராகரித்தது. இதனை எதிர்த்து பிரணவ் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தாலும் அந்த காலக்கட்டத்தில் வயிற்றில் சிசுவாக இருந்த குழந்தை இந்திய குடியுரிமையை மீண்டும் பெறுவதற்கு உரிமை உள்ளது எனக் கூறி அவருக்கு குடியுரிமை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

Related Stories: