×

வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல்

சென்னை: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்ற கூடியவர்களுக்கு குறிப்பாக கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் போன்ற தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு அந்த நாடுகளில் ஆளாகின்றனர். முகவர்களால் ஏமாற்றப்பட்டு; அதிக சம்பளம், நல்லவேலை என்ற பொய் வாக்குறுதிகளை நம்பி அதிக அளவில் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்கு சென்ற தொழிலாளர்கள் அங்கு சென்ற பின்னர் சொல்லப்பட்ட வேலையோ, உறுதியளிக்கப்பட்ட சம்பளம் கிடைக்காமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். வெளிநாடுகளில் இறந்துபோன பலருடைய உடல்கள் தாயகம் வருவதற்கு மாதக்கணக்கில் நாட்கள் எடுத்துக் கொள்கின்றன. எனவே அந்த வாரியம் முறையாக அமைக்கப்பட்டு அதற்கான நலத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Expatriate Tamil Welfare Board ,Chennai ,-Workers Party ,Ponkumar ,Overseas Tamil Welfare ,Minister ,Senji Masdan ,
× RELATED தொழிலாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை...