20ம் தேதி கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நாளை 20ம் தேதி காலை 10 மணிக்கு கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் முன்னிலையில், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்க உள்ளனர்.மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் (பொது துறை உட்பட) கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி அனைவரும் தவறாது மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: