திருமழிசை பேரூராட்சி கூட்டம்

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சி கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் உ.வடிவேல் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கி.ரவி முன்னிலை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள் எஸ்.பிரியா, பி.மஞ்சுளா, வி.விஜயலட்சுமி, அ.கஸ்தூரி, வீ.வேணுகோபால், டி.எம். ரமேஷ், ஜெ.மகாதேவன், ஆர்.ராஜேஷ், எஸ்.ஜீவா, ஜெ.லதா, எஸ்.அனிதா, வி.ஜெயசுதா, ஆர்.பிரதீப், வி.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோரிக்கைகள் குறித்து பேசினர். பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 15  வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: