ஜூன் தேர்வு கால அட்டவணை வெளியீடு: சென்னை பல்கலை தகவல்

சென்னை: ஜூன் மாத தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக சென்னை பல்கலைகழகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கை: எம்.எல். டிகிரி (பிரைவேட் ஸ்டடி) படிப்பிற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான கால அட்டவணை www.unom.ac.in என்ற பல்கலைகழக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: