‘’செத்தா என்ன செய்வீர்கள்’’ என கேட்டுவிட்டு பிளஸ் 1 மாணவன் தற்கொலை: ஆதம்பாக்கத்தில் பரிதாபம்

ஆலந்தூர்: ‘‘செத்தா என்ன செய்வீர்கள்’’ என்று நண்பர்களிடம் கேட்டுவிட்டு பிளஸ் 1 மாணவர் தற்கொலை செய்தது சோகத்தை  ஏற்படுத்தியது. சென்னை ஆலந்தூர் மடுவின்கரை 1வது தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரின் மகன் விஷ்வா(17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்தார். நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிய விஷ்வா, குளிக்க செல்வதாக கூறிவிட்டு பாத்ரூமுக்கு சென்றுள்ளார். இதன்பின்னர் ரொம்ப நேரமாக வெளியே வரவில்லை என்றதும் பெற்றோர் கதவை தட்டியுள்ளனர். ஆனால் கதவை திறக்காததால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், அக்கம்பக்கத்தினரை அழைத்துவந்து கதவை உடைத்து பார்த்தனர். உள்ளே மாணவன் விஷ்வா, தூக்கில் தொங்கி தற்கொலை செய்திருப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி துடித்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் பரங்கிமலை ஆய்வாளர் ஜெர்ரி போலீசாருடன் சம்பவ இடத்துக்கு வந்து மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர். இதில், ‘‘நேற்று மாலை மாணவர்களுடன் சிரித்து விளையாடும்போது விஷ்வா, ‘‘நான் செத்தா நீங்க என்னடா பண்ணுவீங்க’’ என்று கேட்டபோது ‘’நன்றாக டான்ஸ் ஆடுவோம்’’ என்று நண்பர்கள் கிண்டல் செய்துள்ளனர். இந்த நிலையில், விஷ்வா தற்கொலை செய்யும் எண்ணத்துடன்தான் இவ்வாறு கேட்டுள்ளார்’ என்று நண்பர்கள் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: