ஜவ்வாதுமலையில் பெய்த கன மழையால் பீமன் அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

போளூர்: ஜவ்வாதுமலையில் பெய்த கன மழையால் பீமன் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  போளூர் மற்றும் ஜவ்வாதுமலையில் தினமும் முற்பகலில் கடும் வெயிலும் பிற்பகலில் இருந்து இரவு வரை சூறாவளி காற்றுடன்  கனமழையும் பெய்து வருகிறது. போளூரில் கடந்த 15ம் தேதி 38.2 மி.மீ, 16ம் தேதி 64.8 மி.மீ, 17ம் தேதி 32.8 மி.மீ என மழையளவு பதிவாகி உள்ளது.

இதேபோல் ஜவ்வாதுமலையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக போளூர் மஞ்சள் ஆறு, செய்யாறு, கமண்டல ஆறு, நாகநதி ஆறு, என எல்லா ஆறுகளிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜமனாமரத்துர் சுற்றுலா ஏரி நிரம்பி வழிகிறது. அதோடு பீமன் அருவியிலும் புது வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.

Related Stories: