சென்னையில் பெண்ணிடம் ரகளை செய்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: மூதாட்டியை வெட்டி படுகொலை செய்த இளைஞர் கைது

சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில், போதையில் ரகளை செய்ததை தட்டிக்கேட்ட மூதாட்டியை, சரமாரியாக வெட்டிக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகர் 3-வது தெருவை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், வயதான பாட்டியின் காதை அறுத்து நகை திருடியது,  தந்தையையே கொலை செய்தது போன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், குண்டர் தடுப்புச் சட்டம் காவலில் சிறையில் இருந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்புதான், விக்னேஷ் சிறையிலிருந்து வெளிவந்துள்ளார்.

இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த ஆஷா என்பவரின் மகள் ஆர்த்தியிடம், தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஆர்த்தியிடம் விக்னேஷ் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அங்கிருந்த வேலாத்தா என்ற மூதாட்டி தட்டிகேட்டுள்ளார். அப்பொழுது, போதை தலைக்கேறிய நிலையில், கையில் பட்டா கத்தியுடன் நின்றிருந்த விக்னேஷ், வேலாத்தாவை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார். இதனால் இளைஞர் விக்னேஷை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: