×

தாவரவியல் பூங்காவில் `ஊட்டி 200’ மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: `ஊட்டி 200’ ஆண்டு விழா கொண்டாடப்படும் நிலையில், தாவரவியல் பூங்காவில் மலர் தொட்டிகளை கொண்டு `ஊட்டி 200’ என அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். எனினும், கோடை விடுமுறையான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவர்களை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் கோடை காலமான மே மாதம் பல்வேறு விழாக்கள் மற்றும் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது, பல லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகிறது.

குறிப்பாக, புது பூங்காவில் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படுகிறது. இந்நிலையில், இம்முறை `ஊட்டி 200’ கொண்டாடப்படும் நிலையில், இதனை பிரதிபலிக்கும் வகையில் தாவரவியல் பூங்கா புது பூங்காவில் மலர் தொட்டிகளை கொண்டு `ஊட்டி 200’ என்ற மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இது தவிர பல்வேறு மலர் அலங்காரங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags : Botanical Park , In the Botanical Garden `Ooty 200 'Floral Decoration: Tourist Enjoy
× RELATED ஊட்டி தாவரவியல் பூங்காவில் ‘டாம் அன்...