காரமடையில் அதிகாலையில் துணிகரம் பூ வியாபாரியின் மொபட்டை திருடிய சிறுவன்: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டை

மேட்டுப்பாளையம்:  மேட்டுப்பாளையம் அடுத்த காரமடையை அருகே உள்ளது கண்ணார்பாளையம். இங்குள்ள மத்தம்பாளையம் செல்லும் சாலையில் தெற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ். இவர் கோவை பூ மார்க்கெட் பகுதியில் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்துவது வழக்கம். நேற்று முன்தினம் இரவும் வழக்கம்போல் மொபட்டை வீட்டின் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச்சென்றார்.

நேற்று காலை எழுந்து பார்த்தபோது மொபட்டை காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் ஒரு சிறுவன் அதிகாலை 1.40 மணி அளவில் வருவதும், மொபட்டில் பெட்ரோல் உள்ளதை உறுதி செய்வதும், சைடு லாக்கை சத்தமில்லாமல் லாவகமாக உடைத்து மொபட்டை திருடிச்செல்வதும் பதிவாகி இருந்தது. சிசிடிசி காமிரா பதிவுடன் மோகன் ராஜ்  காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மொபட் திருடிய சிறுவனை தேடி வருகிறார்கள்.

Related Stories: