நடிகர் தனுஷின் 'Wunderbar films'தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியது

சென்னை: நடிகர் தனுஷின் Wunderbar films தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், Wunderbar films என்ற ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி பாடல், எழுத்து, இயக்கம் என பன்முக திறமை கொண்ட இவர், Wunderbar films என்ற பெயரில் நல்ல திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

இந்த Wunderbar films நிறுவனத்தின் யூடியூப் சேனல் நேற்று மர்ம நபர்களால் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் அந்த சேனலில் இருந்த பாடல்கள் மற்றும் வீடியோ அனைத்தும் நீக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதனையடுத்து யூடியூப் இந்தியா, Wunderbar films சேனலை மீட்டெடுக்க உதவி செய்து வருவதாகவும் விரைவில் சேனல் மீண்டு வரும் என்றும் நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில், Wunderbar films யூடியூப் சேனல் நேற்று காலை ஹேக் செய்யப்பட்ட நிலையில், இன்று மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் தனுஷின் Wunderbar films தயாரிப்பு நிறுவனத்தின் யூடியூப் சேனல் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

Related Stories: