×

கடைக்கோடி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேர வேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: அரசின் நலத்திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே தனது நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. ஒன்றிய அரசின் 6 திட்டங்களின் நிலை குறித்து கூட்டத்தில் குழுவினருடன் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் 6 திட்டங்கள் இன்று ஆய்வுக்கு எடுத்துச் கொள்ளப்படுகின்றன. ஒன்றிய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.

எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம். சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினருக்குமான வளர்ச்சி இருக்க வேண்டும். கடைக்கோடி குடிமகனுக்கும் திட்டம் போய் சேர வேண்டும் என தெரிவித்தார். விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த முதல்வர், தமிழகம் முழுவதும் ரூ.6000 கோடி செலவில் பண்ணைக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் 14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்ப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் திறன் வளர்க்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Tags : Government ,Chief Minister ,BC ,K. Stalin , Shopkeeper Man, Welfare Scheme, DMK Government, MK Stalin
× RELATED வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க...