கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்... அகர்வால் நம்பிக்கை!

நவி மும்பை: ‘இன்னும் எங்களின் சிறந்த  கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை, அதை கடைசி ஆட்டத்திலாவது  செய்ய ஆவலுடன் இருக்கிறோம்’ என்று பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயாங்க் அகர்வால் தெரிவித்தார். ஐபிஎல் தொடரின் நடப்பு சீசனில் பஞ்சாப் அணி இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 7 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7வது இடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் நவி மும்பையில் நடந்த 13வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் 17 ரன்னில் தோற்றது. தோல்விக்கு பிறகு பேசிய பஞ்சாப் கேப்டன் மயாங்க், ‘இந்த ஆட்டத்தில் 5-10வது ஓவர்களுக்கு இடையில்தான் அதிக விக்கெட்களை இழந்துவிட்டோம். டெல்லி நிர்ணயித்த 160 ரன் எளிதில் துரத்தக் கூடிய இலக்குதான். கூடவே ஆடுகளமும் நினைத்த அளவுக்கு மோசமாக இல்லை. இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ளது. அந்த ஆட்டத்தில் சிறந்த கிரிக்கெட் விளையாட வேண்டும். இன்னும் எங்களின் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. அதை கடைசி ஆட்டத்தில் அதை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம்’ என்றார். பஞ்சாப் அணி தனது கடைசி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மே 22ம் தேதி மோதுகிறது.

Related Stories: