காஞ்சி மாநகராட்சியில் புதிய டிரான்ஸ்பார்மர்கள்: எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் ரூ.10.09 லட்சத்தில் 2 புதிய டிரான்ஸ்பார்மர்களை எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி பகதூர்கான்பேட்டை, ரெட்டிப்பேட்டை ஆகிய பகுதிகளில் 100 கேவி திறன் கொண்ட 2 புதிய டிரான்ஸ்பார்மர்கள் திறப்பு விழா நேற்று நடந்தது. மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொதுமக்கள் பயன்பாட்டுக்கு, எம்எல்ஏ எழிலரசன், புதிய டிரான்ஸ்பார்மர்களை திறந்து வைத்தார்.

மண்டல குழுத் தலைவர் எஸ்.சந்துரு, கவுன்சிலர்கள் சித்ரா ராமச்சந்திரன், சுரேஷ், கமலக்கண்ணன், சர்மிளா, கௌதமி, முருகன் பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.எஸ் முத்துசெல்வம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் யுவராஜ், பி.எஸ்.குடியரசு, நகர பொருளாளர் வெங்கடேசன், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சண்முகம், செயற்பொறியாளர் வடக்கு சரவணதங்கம், உதவி செயற் பொறியாளர் இளையராஜன், உதவி பொறியாளர் கிள்ளிவளவன், சோழராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: