×

தமிழக- கர்நாடக மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானையால் பீதி

சத்தியமங்கலம்: தமிழக- கர்நாடக மலைப்பாதையான தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை காட்டு யானை உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம்-கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. வனப்பகுதியில் வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவதும், சாலையை கடந்து செல்வதும் வழக்கம்.

நேற்று மதியம் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடியது. காட்டு யானை வாகனங்களை வழிமறித்து சாலையில் நடந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். காட்டு யானை சிறிது நேரம் சாலையில் உலாவியபின் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகன ஓட்டிகள் புறப்பட்டுச் சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை நடமாடியதால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Tags : Tamil Nadu ,Karnataka hills , Tamil Nadu, Karnataka Hill Trail, Wander, Wild Elephant
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...