இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு: திரிகோணமலையிலிருந்து மாஜி பிரதமர், மகன் எஸ்கேப்?

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டார். இன்றைய கூட்டத்தில் மாஜி பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட மக்களின் போராட்டத்தால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது குடும்பத்தினர் பதவி விலகினர். இதையடுத்து, நாட்டின் 26வது பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இந்த நிலையில் இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதிவேற்றபின், முதல் முறையாக இன்று நாடாளுமன்றம் கூடியது. முன்னதாக ரணில் விக்ரமசிங்கே வெளியிட்ட பதிவில், ‘இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரத்தைக் குறைப்பதற்காக 21வது சட்டத் திருத்தத்தை கொண்டு வருவது குறித்து அட்டர்னி ஜெனரல் அலுவலகத்துடன் ஆலோசிக்கப்படும். அதிபருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் 20ஏ சட்டத்திருத்தத்துக்கு எதிராக 21வது சட்டத் திருத்த மசோதாவுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற சமர்ப்பிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்றம் கூடியதும், புதிய துணை சபாநாயகர் தேர்வு குறித்த வாக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. துணை சபாநாயகர் பதவிக்கு இருவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. எதிர்கட்சியான  ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு ரோகினி கவிரத்னவின் பெயரும், லங்கா பொதுஜன பெரமுனா சார்பில் அஜித் ராஜபக்சவின் பெயர் துணை சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டது. நண்பகல் நடந்த ரகசிய வாக்கெடுப்பின் போது, எம்பி அஜித் ராஜபக்சேவுக்கு 109 வாக்குகளும், எம்பி ரோகினி கவிரத்னவுக்கு 78 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது மகனான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சே மற்றும் பஷில் ராஜபக்சே ஆகியோர் அவைக்கு வருகை தரவில்லை. அதனால் அவர்கள் திரிகோண மலையிலிருந்து ெ வளியேறிவிட்டனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Related Stories: