கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைது செய்யப்படும்: போலீஸ் கமிஷ்னர் எச்சரிக்கை

சென்னை: சென்னையில் ரூட்டு தல பிரச்சினை தொடர்பாக நேற்று 3 சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் மாணவர்கள் மீது தவறு உள்ளது. மேலும்,அறிவுரை கூறியும் பஸ்  படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி வருகின்றனர். குறிப்பாக அரசு ஊழியர்களையும் தாக்கி வருகின்றனர். இதனால் சக பயணிகளுக்கு இடையூறாக உள்ளது. எனவே இனி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ரூட் தல பிரச்சினையில் சென்னையில் கல்லூரி மாணவர்கள் நேற்று மோதிக்கொண்ட நிலையில் போலீஸ் கமிஷ்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

Related Stories: