பெரம்பலூர் அருகே சினிமா டைரக்டருக்கு கத்தி வெட்டு: 6 மர்ம நபர்களுக்கு வலை

பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சி அரணாரை அண்ணா தெருவை சேர்ந்த செல்வராஜ் (எ) அப்துல் ரகுமான் (39). இவர் 10 ஆண்டுகளுக்கு முன் தமிழ்தேசம் என்ற படத்தை இயக்கினார். கோனேரிப்பாளையத்தை சேர்ந்த ராஜா (35) என்பவருடன் ஆலம்பாடியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு பைக்கில் நேற்று சென்றார். கோனேரிப்பாளையம்- செஞ்சேரி புறவழிச்சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே, 2 பைக்குகளில் வந்த 6 பேர், செல்வராஜை சினிமா பாணியில் விரட்டி பின்தொடர்ந்தனர்.

அப்போது மர்மநபர்களில் ஒருவன், தன்னிடமிருந்த கத்தியால் செல்வராஜை வெட்டினான். படுகாயமடைந்த செல்வராஜ், பைக்கை நிறுத்தாமல் ஆலம்பாடிக்கு தப்பி சென்றார். இதையடுத்து மர்மநபர்கள் தப்பி சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள மருத்துவமனையில் செல்வராஜ் சேர்க்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வராஜை தாக்கியது யார், எதற்காக தாக்குதல் நடந்தது என விசாரிக்கின்றனர்.

Related Stories: