×

திருவாரூர், நன்னிலம் பகுதியில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

நன்னிலம்: வெப்ப சலனம் காரணமான திருவாரூர் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் தேங்கியது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவில், நேற்று நள்ளிரவு 1.15 மணி அளவில், கன மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அதிகாலை ஐந்தரை மணிவரை நீடித்தது, அக்னி நட்சத்திரம் பிறந்ததிலிருந்து, அவ்வப்போது மழை பெய்து வருவதால், இவ்வாண்டு பொதுமக்கள் அக்னி நட்சத்திர வெயிலிலிருந்து ஓரளவு தப்பித்து வருகின்றனர். காலநிலை பருவ மாற்றத்தின் காரணமாக, வானிலை சூழலில், மேலடுக்கு சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டதால், உருவான புயல், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தின் காரணமாக, நன்னிலம் தாலுகா பகுதியில், தொடர்ந்து இரண்டு நாட்களாக, நள்ளிரவு நேரத்தில், கனத்த மழை பெய்து வருகிறது.

தற்போதைய வறண்ட சூழ்நிலையால் மழைநீர் உடனே உறிஞ்சப்படுவதால், தற்போது நடைபெற்று வரும் பருத்தி விவசாயத்திற்கு, எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது என விவசாயிகளின் தெரிவித்து வருகின்றனர். பள்ளமான பகுதிகளில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், மழைநீர் தேங்குவதால், தங்களுக்கு பருத்திச் செடி வேர் அழுகும் நிலை ஏற்படும் என கவலை தெரிவித்து வருகின்றனர். பகலில் சுட்டெரிக்கும் வெயில், நள்ளிரவில் மழை என்று, தற்போதைய சூழ்நிலை நன்னிலம் பகுதியில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் விவசாயிகளில் சிலர் ஜூன் மாதத்தில், மேட்டூரில் தண்ணீர் திறப்பு எதிர்நோக்கி, குறுவை சாகுபடிக்கு தயாராகி வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, இந்தாண்டு கோடை மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் பகல் நேர வெப்பமும் சுட்டெரிக்கிறது. இதேபோல் திருவாரூர் நகரில் நேற்று பிற்பகல் சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக மழை செய்தது. இந்த திடீர் மழையால் சாலைகளில் பொதுமக்கள் குடைபிடித்துக்கொண்டு சென்றனர். ரோடுகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.

Tags : Thiruvarur ,Nannilam , Widespread rain in Thiruvarur, Nannilam area: People happy
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...