×

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 2 ஆயிரம் தொட்டிகளில் லில்லியம் மலர்கள்: பார்வையாளர்கள் மாடத்தில் ஜொலிக்கிறது

ஊட்டி:  மலர் கண்காட்சிக்காக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2 ஆயிரம் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள லில்லியம் மலர்கள் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக பார்வையாளர்கள் மாடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது. கோடை சீசன் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனை காண தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

அதேபோல், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கண்காட்சிக்காக ஆண்டுதோறும் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு, பூங்கா முழுவதிலும் பல வண்ணங்களில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கும். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் பல வகையான மலர் செடிகள் நடவு செய்யப்படும். இந்த தொட்டிகள் பார்வையாளர்கள் மாடத்தில் பல வடிவங்களில் அடுக்கி வைக்கப்படும். இந்த மலர் அலங்காரங்களை சுற்றுலா பயணிகள் கண்டு  ரசித்து செல்வது வழக்கம். ஆண்டு தோறும் பூங்காவில் உள்ள மாடங்களில்  கொய்மலரான லில்லியம் மலர் வைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்த லில்லியம் மலர்  செடிகள் 2 ஆயிரம் தொட்டிகளில் தயார் செய்யப்பட்டுள்ளன. இவைகள் தற்போது பார்வையாளர்கள் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன. சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இந்த மலர்கள் மாடங்களில் அடுக்கி  வைக்கப்பட்டுள்ளன. மலர் கண்காட்சி முதல் இதனை காண சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன்  புகைப்படமும் எடுத்துச் செல்லலாம்.

Tags : Feedi Government Botanical Park , Lilies in 2,000 pots for flower show at Ooty Government Botanical Gardens: Shining in the visitors' attic
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவை அலங்கரிக்கும் அக்கார்டு மலர்கள்