×

மூலிகை எண்ணெய் தயாரிப்பு முறை

மருதாணி இலை, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி இலை, பூ, வெந்தயம், நான்கு மிளகு, காய்ந்த நெல்லி, நல்லெண்ணெய் கால் கப், தேங்காய் எண்ணெய் முக்கால் கப். ஒரு அகன்ற பாத்திரத்தில் இரண்டு எண்ணெயையும் சேர்த்து, மிதமான சூட்டில் இருக்கும் போது வெந்தயம், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, மருதாணி இலை, காய்ந்தநெல்லி, மிளகு, செம்பருத்தி இலை, பூ, இவைகளை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு நன்றாக கொதிக்க வைத்து ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வாரத்திற்கு இரண்டு நாள், தலையில் இந்த எண்ணெயினை தேய்த்து முடியினை சுத்தம் செய்யலாம். இந்த எண்ணெயினை தொடர்ந்து பயன்படுத்தும்போது, முடி கொட்டுதல், நரை முடி பிரச்னை, நுனிமுடி பிளவு, முடியின் வறட்சித் தன்மை, சளி பிடித்தல் போன்ற தொல்லைகள் இருக்காது. எண்ணெய் வடிகட்டிய பிறகு இருக்கும் கசடை தலை மற்றும் உடலில் தேய்த்துக் குளித்தாலும் மிகச் சிறந்த மாய்ச்சரைசராக விளங்குவதுடன் தேக ஆரோக்கியத்திற்கும் நல்லது.

Tags :
× RELATED பூஜைப் பொருட்கள் தயாரிப்பிலும் லாபம் பார்க்கலாம்!