×

சோமாலியாவுக்கு மீண்டும் அமெரிக்க படைகளை அனுப்ப அதிபர் ஜோபிடன் உத்தரவு ... படைகளை திரும்பப் பெற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் ஆணை ரத்து!!

வாஷிங்டன் : சோமாலியாவுக்கு மீண்டும் அமெரிக்க படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோபிடன் உத்தரவிட்டுள்ளார். சோமாலியாவில் அல்கொய்தாவின் ஆதரவு அமைப்பான அல் ஷபாப் தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பை ஒழிக்கும் நடவடிக்கையில் சோமாலியா அரசுகள் இணைந்து அமெரிக்க முன்னர் தீவிரமாக செயல்பட்டு வந்தது. இதற்காக சோமாலியாவில் நூற்றுக்கணக்கான அமெரிக்கப் படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு ட்ரம்ப், சோமாலியாவில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப் பெற்றார். இந்த நிலையில் சோமாலியாவுக்கு மீண்டும் படைகளை அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோபிடன், உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக 500 வீரர்களை சோமாலியாவுக்கு அனுப்பப்படலாம் என தெரிகிறது. அல் ஷபாப் தீவிரவாதிகளுக்கு எதிராக சோமாலியா படைகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க படைகள் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Tags : President Jobidan ,US ,Somalia ,Former ,President Trump , Somalia, US Army, President, Jobidan
× RELATED அமெரிக்க டாலர்களை மாற்றித்தருவதாக ரூ.15 லட்சம் மோசடி..!!