25 மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள்: எஸ்.சந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருத்தணி: தமிழக அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை கண்டறிந்து நிறைவேற்றும் வகையில் வாரந்தோறும் புதன்கிழமை தாலுகா அளவில் மருத்துவ ஆய்வு முகாம்கள் நடந்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை ஆகிய தாலுகாவை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கும் விழா திருத்தணி கமலா திரையரங்கம் அருகே  நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் பங்கேற்று, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களை வழங்கினார். தொடர்ந்து, மூன்று சக்கர சைக்கிள்களை பெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் விரைந்து கிடைக்க ஏற்பாடு செய்த எம்எல்ஏ சந்திரனுக்கு நன்றி தெரிவித்தனர். இதில், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாபு, முடநீக்கி வல்லுநர் ஆஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: