பான் இந்தியா ஸ்டாராக ஜூனியர் என்டிஆர் தேர்வு

மும்பை: பான் இந்தியா ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பில் ஜூனியர் என்டிஆர் முதலிடம் பெற்றுள்ளார். தெலுங்கில் தற்போது பான் இந்தியா படங்கள் அதிகமாக உருவாகி வருகின்றன. இந்த படங்கள் பாலிவுட்டில் அதிக வசூல் சாதனை படைக்கின்றன. இதையொட்டி பாலிவுட்டில் இயங்கும் மீடியா நிறுவனம் ஒன்று, இந்த ஆண்டின் பான் இந்தியா ஸ்டார் யார் என மக்களிடம் கருத்து கணிப்பு நடத்தியது. இதில் இந்தி நடிகர்களை பின்னுக்கு தள்ளி ஜூனியர் என்டிஆர் முதலிடம் பிடித்திருக்கிறார். ஆர்ஆர்ஆர் படத்தில் கொமரம் பீம் கேரக்டரில் நடித்ததன் மூலம் அவர் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறார். அடுத்த இடத்தில் புஷ்பா படத்தில் நடித்த அல்லு அர்ஜுன் இருக்கிறார். கடந்த ஆண்டு முன்னணியில் இருந்த பிரபாஸ், இந்த ஆண்டில் பின்தங்கியிருக்கிறார். இதுவரை பான் இந்தியா படத்தில் நடிக்காத விஜய் தேவரகொண்டா, 7வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: