8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்த நயன்தாரா

சென்னை: நயன்தாரா நடித்துள்ள புதிய படம் ஓ2(ஆக்சிஜன்). இந்த படத்தை ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கி உள்ளார். எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். இந்த படத்தில் 8 வயது சிறுவனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் நயன்தாரா. தமிழ்நாடு, கேரள எல்லையில் உள்ள மலை பாதையில் தன் மகனுடன் பயணம் செய்கிறார் நயன்தாரா. அப்போது அந்த பஸ் ஒரு புதைகுழியில் விழுந்து விடுகிறது. பஸ்சில் இருப்பவர்கள் உயிர் பிழைக்க ஆக்சிஜன் தேவை. நுரையீரல் பிரச்சினை உள்ள நயன்தாரா மகன் வைத்திருக்கும் ஆக்சிஜசன் சிலிண்டரை அபகரிக்க பயணிகள் முயற்சிக்கிறார்கள். அதிலிருந்து மகனை அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை. தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். 

Related Stories: