தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் உலக அளவில் தமிழகத்தின் புகழ் பரவுகிறது: ஜி.கே.வாசன் பெருமிதம்

சென்னை: தேவசாகயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கியிருப்பதன் மூலம் உலக அளவில் தமிழ்நாட்டின் புகழ் பரவுகிறது என்று ஜி.ேக.வாசன் கூறியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த தேவசகாயத்துக்கு இத்தாலி நாட்டின் வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதனால் உலக அளவில் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்ந்திருக்கிறது. ‘அதிகரிக்கும் கஷ்டங்களைத் தாங்குதல்’ என்று அழைக்கும் புனிதர் பட்டத்தைப் பெற்ற முதல் தமிழர் தேவசகாயம் என்பது பாராட்டுக்குரியது. தமிழகத்தைச் சேர்ந்த தேவசகாயம், புனிதர் பட்டத்துக்கு தகுதியானவர். காரணம், தென்னிந்தியாவில் பரவலாக ஒரு தியாகியாக கருதப்பட்டார். மேலும் அனைத்து மக்களுக்கும் சமத்துவத்தை வலியுறுத்தினார். குறிப்பாக தேவசகாயம் மேற்கொண்ட இறைப்பணிக்கும், மக்கள் நலப்பணிகளுக்கும் புனிதர் பட்டம் கிடைத்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் தமிழ்நாட்டின் புகழ் பரவுகிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: