நூல்விலை உயர்வு ஒன்றிய அரசுக்கு டிடிவி கண்டனம்

சென்னை: நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி எழுந்து வரும் குரல்களை ஒன்றிய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இதுகுறித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: நாட்டிற்கு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பின்னலாடை உற்பத்தியை முடக்கும் அளவுக்கு தொடர்ந்து நூல் விலையை உயர்த்தி வருவது கண்டனத்திற்குரியது. நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி போராடி வரும் திருப்பூர் பகுதி விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக கவனித்து, நிறைவேற்றி தர வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தோடு தொடர்புடைய இப்பிரச்னைக்கு சுமூகத் தீர்வு காண வேண்டுமென்று தொடர்ச்சியாக எழுந்து வரும் குரல்களை ஒன்றிய அரசு புறந்தள்ளுவது நல்லதல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: