×

கோவில்பட்டியில் தேசிய இளையோர் ஹாக்கி இன்று தொடக்கம்

கோவில்பட்டி: அகில இந்திய அளவிலான 12வது தேசிய இளையோர் ஆடவர் ஹாக்கிப் போட்டி  கோவில்பட்டியில் இன்று தொடங்குகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 30 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றன. ஏ, பி பிரிவில் தலா 3 அணிகளும்,  சி, டி, இ, எப், ஜி, எச் பிரிவுகளில் தலா 4 அணிகளும் உள்ளன. தமிழ்நாடு ஜி பிரிவிலும், புதுச்சேரி சி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இன்று காலை தொடங்கும் முதல் ஆட்டத்தில்  பீகார் - அசாம் அணிகள் மோதுகின்றன. மாலையில் நடைபெறும் தொடக்கவிழாவுக்குப் பிறகு நடக்கும் முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு-சட்டீஸ்கர் அணிகள் களம் காண்கின்றன. லீக் சுற்று மே 24ம் தேதியுடன் முடிகிறது. காலிறுதி ஆட்டங்கள் மே 25ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் மே 26ம் தேதியும், இறுதி ஆட்டம்  மே 29ம் தேதியும் நடைபெற உள்ளன.

Tags : National Youth Hockey ,Kovilpatti , National Youth Hockey starts today at Kovilpatti
× RELATED கோவில்பட்டியில் 16 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து வருபவருக்கு வலை