×

குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணையவழி பயிற்சி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநர் தகவல்

சென்னை: குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் சென்னை-32 கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் - 4 தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான நேரடி மற்றும் இணையவழி பயிற்சி வகுப்புகள் வரும் 20ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://t.me/+huB_ieZ54OEzODc9 என்ற இணைப்பினை பயன்படுத்தி கொள்ளவும். எனவே, குரூப்-4 போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இப்பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Online training for students with disabilities preparing for Group 4 exam: Director of Employment and Training Department Information
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...