×

இத்தாலி சர்வதேச டென்னிஸ் 6வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்

ரோம்: இத்தாலி சர்வதேச டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸுடன் (23 வயது, 5வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (34 வயது, செர்பியா), அதிரடியாக விளையாடி முதல் செட்டை  6-0 என்ற கணக்கில் எளிதில் வசப்படுத்தினார்.  ஆனால், 2வது செட்டில் சிட்சிபாஸ் கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை நீண்டது. அதில் ஜோகோவிச் 7-6 (7-5) என வென்று 6வது முறையாக இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டில் ஜோகோவிச் பெறும் முதல் சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிபி மாஸ்டர்ஸ் 1000 அந்தஸ்து தொடர்களில் 38வது பட்டத்தை வென்றுள்ள அவர், இந்த பட்டியலில் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். ஸ்பெயின் நட்சத்திரம் நடால் 36 பட்டங்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.


Tags : Djokovic ,Italy International Tennis Championship , Djokovic wins Italy International Tennis Championship for the 6th time
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் ஜோகோவிச்சை வீழ்த்திய சென்னை ஓபன் ரன்னர்!