×

சென்னை ஐஐடி - உடன் காத்மாண்டு பல்கலைக்கழகம் 2 ஒப்பந்தங்கள் உட்பட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேபாளம், இந்தியா இடையே கையெழுத்தானது!!!

புதுடெல்லி: நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி, புத்த பூர்ணிமாவையொட்டி இன்று ஒரு நாள் அரசுமுறை பயணமாக நேபாளம் சென்றுள்ளார். நேபாளம் சென்ற பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார்.

பின்னர் இருவரும் லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் தரிசனம் செய்தனர். நேபாள பிரதமரும், இந்திய பிரதமரும் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தினர்.கோவிலை ஒட்டி அமைந்துள்ள அசோக தூண் அருகே இருவரும் தீபம் ஏற்றினர். கி.மு. 249-ல் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட தூண், லும்பினி புத்தர் பிறந்த இடம் என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றாக திகழ்கிறது.

நேபாளத்தின் லும்பினியில் உள்ள லும்பினி மடாலய மண்டலத்தில் புத்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கான இந்திய சர்வதேச மையத்தை கட்டமைப்பதற்கான பூமி பூஜையை நேபாள பிரதமர் மேதகு ஷேர் பகதூர் தூபாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டார். தேராவாடா, மஹாயானா மற்றும் வஜ்ராயானா ஆகிய மூன்று முக்கிய புத்த பாரம்பரியங்களைச் சேர்ந்து துறவிகளால் பூமிபூஜை மேற்கொள்ளப்பட்ட பிறகு, மையத்தின் மாதிரியை இரு நாடுகளின் பிரதமர்களும் திறந்து வைத்தனர்.

தொடர்ந்து, இந்திய பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோ இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது  ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு கூட்டுறவில் புதிய பகுதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலாச்சாரம் மற்றும் கல்வித்துறைகளில் ஒத்துழைப்புக்கான 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

பிரதமர் பயணத்தின்போது கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பட்டியல்

1. புத்தமத ஆய்வுகளுக்கான டாக்டர் அம்பேத்கர்  இருக்கை அமைப்பது குறித்து லும்பினி புத்தசமய பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

2. இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து சிஎன்ஏஎஸ் திரிபுவன் பல்கலைக்கழகத்திற்கும் இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சிலுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்

3. இந்திய ஆய்வுகளுக்கான ஐசிசிஆர் இருக்கையை உருவாக்குவது குறித்து காத்மாண்டு பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான கவுன்சில் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

4. சென்னை இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம்,நேபாளம் ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

5. இந்தியத் தொழில்நுட்ப கல்விக் கழகம், சென்னை, இந்தியா, காத்மாண்டு பல்கலைக்கழகம், நேபாளம் இடையே ஒப்பந்தத்திற்கான விருப்ப கடிதம் ( முதுநிலை அளவில் கூட்டு பட்டப்படிப்பு திட்டத்திற்காக)

6. அருண் 4 ப்ராஜெக்ட் என்பதன் அமலாக்கம் மற்றும் மேம்பாட்டிற்காக எஸ்ஜேவிஎன் லிமிடெட் மற்றும் நேபாள மின்சார ஆணையத்திற்கும் இடையே ஒப்பந்தம்



Tags : Chennai ,IIT - Kathmandu University ,Nepal ,India , Chennai IIT, Kathmandu, University, Contracts, Nepal, India
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...