மதுரையில் தனியார் நிறுவன காவலாளி படுகொலை: போலீசார் தீவிர விசாரணை

மதுரை: மதுரையில் தனியார் நிறுவன காவலாளி கொல்லப்பட்ட நிலையில் , தொடர்கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் என்ற 63 வயது முதியவர். மதுரை மேலைக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பேருந்து நிறுத்தும் இடத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இன்று காலை அந்நிறுவன ஊழியர்கள் அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது முருகேசன் சடலமாக கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடனும், அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. தனியார் பேருந்து நிறுவனத்தில் உள்ள விலையுயர்ந்த பேட்டரிகளை திருட வந்த நபர்களை தடுத்ததால் காவலாளி முருகேசன் கொல்லப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.      

Related Stories: