இமாச்சலில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு: சிம்லா வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சில இடங்களில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புள்ளதாக சிம்லா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தின் உயரமான பகுதிகளில் மழையுடன் பனிப்பொழிவும் இருக்கும் என்று சிம்லா வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இமாச்சலில் அடுத்த 3 நாட்களுக்கு  ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் ஒருசில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் அதிகபட்சமாக நேற்று உனா பகுதியில் 44 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் பதிவானதாக கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து காங்க்ராவில் 41 டிகிரி, ஹமிர்பூரில் 40 டிகிரி, பிலாஸ்பூரில் 39.2, சாம்பாவில் 39, சுந்தர் நகரில் 37.7, நாஹன் மற்றும் பன்டரில் 37.5, சோலன் 37.2, சர்மஸ்தலா 37, பலம்பூக்ர மற்றும் சிம்லாவில் 30,5 ஆகவும் வெப்பநிலை பதிவானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: