×

ஹோல்சிம் பங்குகளை ரூ.80 ஆயிரம் கோடிக்கு வாங்குவதால் இந்திய சிமெண்ட் துறையில் கால்பதிக்கும் அதானி குழுமம்

மும்பை: ஹோல்சிம் நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்குவதன் மூலம், இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமெண்ட் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளது. ஆசியாவின் மிகப் பெரிய பணக்கார நிறுவனமான கவுதம் அதானி குழுமம், துறைமுகம், ஆற்றல் துறை, நிலக்கரி சுரங்கம், விமான நிலையம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்து வருகிறது. தற்போது ஹோல்சிம் லிமிட்டெட் பங்குகளை வாங்குவதன் மூலம் சிமெண்ட் துறையிலும் களமிறங்கவுள்ளது.

கடந்தாண்டு அதானி குழுமம், அதானி சிமெண்டேசன் லிமிடெட் மற்றும் அதானி சிமெண்ட் லிமிடெட் என்ற 2 துணை நிறுவனங்களை நிறுவியது. இதில் அதானி சிமிண்டேஷன் நிறுவனம் 2 சிமெண்ட் யூனிட்டுகளை குஜராத் தாஹேஜ் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள ரைகார்கில் நிறுவ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இப்போது சிமெண்ட் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் சுவிஸ் நாட்டு நிறுவனமான ஹோல்சிம் லிமிடெட்  இந்தியா நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளை ரூ.80 ஆயிரம் கோடிக்கு  வாங்கவுள்ளது. இந்த ஹோல்சிம் நிறுவனத்தின் பங்குகளை அதானி குழுமம் வாங்குவதன் மூலம் அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஏசிசி லிமிட்டெட் மற்றும் அம்புஜா சிமெண்ட் இரண்டையும் இணைத்து இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சிமெண்ட் நிறுவனமாக உருவெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : Adani Group ,Holcim , Adani Group to set foot in Indian cement as it buys Holcim shares worth Rs 80,000 crore
× RELATED திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா...