மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்!: கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்க மாநில பாஜக முடிவு..!!

டெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீண்டும் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் வரும் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வருகிற 24ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில், அடுத்த மாதம் கர்நாடகாவில் 5 இடங்களுக்கு மாநிலங்களவை தேர்தல் நடைபெறுவதையடுத்து, அதில் ஒரு இடத்திற்கு  நிர்மலா சீதாராமனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற மாநில பா.ஜ.க. குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கர்நாடக முன்னாள் முதலமைச்சர்  எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் மாநிலங்களை உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 7 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு பதவி வகித்து வருகிறார் என்பது நினைவுகூரத்தக்கது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினர்களின் அடிப்படையில் வாக்குகள் நிர்ணயம் செய்யப்படுவதால் இந்த தேர்தல் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: