கரியசோலை சாலையில் முற்புதர்களை வெட்டி அகற்ற கோரிக்கை

பந்தலூர் :  பந்தலூர் அருகே தேவாலாவில் இருந்து கரியசோலை, ராக்வுட், நெலாக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் தினமும் அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இந்நிலையில், சாலையின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் உள்ளிட்ட முற்புதர்கள் அதிகரித்து காணப்படுவதால்  வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு எதிரே வரும் வாகனங்கள் குறித்து தெரியாமல் இருப்பதால் சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுகிறது.

 முற்புதர்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கை இல்லை. எனவே, நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள முற்புதர்களை நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: