நடுத்தெரு கெங்கையம்மன் திருவிழாவையொட்டி அம்மன் கோயில்களில் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு-சித்தூர் மாநகரம் முழுவதும் நடந்தது

சித்தூர் : சித்தூரில் நடுத்தெரு கெங்கையம்மன் திருவிழா நாளை நடைபெற இருப்பதால் பக்தர்கள் மாநகரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். சித்தூர் மாநகரத்தில் கடந்த 300 ஆண்டுகளுக்கு மேலாக நடுத்தெரு கெங்கை அம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று எதிரொலியாக கெங்கையம்மன் திருவிழா எளிமையாக நடந்தது.

இந்நிலையில், கடந்த 10ம் தேதி நடுத்தெரு கெங்கையம்மன் திருவிழாவுக்கான காப்பு கட்டப்பட்டது. நாளை, நாைள மறுதினம் இரண்டு நாட்கள் வெகுவிமரிசையாக திருவிழா நடைபெறுகிறது.

சித்தூர் மாநகரத்தை பொறுத்தவரை நடுத்தெரு கெங்கையம்மன் திருவிழாவுக்கு காப்பு கட்டிய பிறகு ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் அருகில் உள்ள அம்மன் கோயில்களில் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம்.

மேலும், நடுத்தெரு கெங்கையம்மனுக்கு உகந்த நாளான வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சித்தூர் முத்தாலம்மன் கோயிலில் உள்ள வளாகத்தில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் மிகவும் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோயிலில் சித்தூர் மாநகரத்தை சேர்ந்த மக்கள் பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். அதேபோல் அம்மனுக்கு நேர்த்திக் கடனாக பொங்கல் வைத்து கோழி, ஆடு பலியிட்டு நேர்த்தி கடனை தீர்த்துக் கொள்வது வழக்கம்.

நேற்று முத்தாலம்மன் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட கோழிகளை அம்மனுக்கு பலியிட்டனர். மேலும், பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் பக்தர்கள் செலுத்தினர்.இந்நிலையில், நாளை காலை 6 மணிக்கு நடுத்தெரு கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதனை தொடர்ந்து 8 மணிக்கு பொங்கல் வைக்கப்படும். 11 மணிக்கு கூழ் ஊற்றப்படும்.

பகல் ஒரு மணிக்கு கும்ப கூடு படைக்கப்படும். புதன்கிழமை மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் ஊர்வலமாக மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் கட்டமஞ்சி ஏரியில் அம்மன் சிலை கரைக்கப்பட உள்ளது. நடுத்தெரு கெங்கையம்மன் திருவிழாைவயொட்டி, சித்தூர் மாநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: