×

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு ரத்தப் புற்றுநோய்: அமெரிக்க ‘நியூஸ் லைன்ஸ்’ பத்திரிகை தகவல்

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை ரத்தப் புற்றுநோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகையில் தகவல் வெளியாகி உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் உளவாளியான கிறிஸ்டோபர் ஸ்டீலி என்பவர், முன்பு அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். தற்போது ரஷ்யாவின் பல்வேறு தரப்பு தகவலின்படி புதின் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், புதினுக்கு நெருக்கமான ரஷ்ய தொழிலதிபர் ஒருவர் மேற்கு நாட்டைச் சேர்ந்த மற்றொரு தொழிலதிபருடன் பேசும் போது, ரத்தப் புற்றுநோயால் புதின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

அந்த தொழிலதிபர் பேசும் உரையாடலின் ஒலிப்பதிவு கிடைத்துள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூஸ் லைன்ஸ்’ பத்திரிகை கூறியுள்ளது. அத்துடன் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க உத்தரவிடுவதற்கு முன்ன தாக, ரத்தப் புற்றுநோய்க்காக புதின் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் வெறிபிடித்தவர் போல நடந்து கொண்டதாகவும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்தப் பேச்சில் ரஷ்ய தொழிலதிபர் கூறியுள்ளதாக பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.இதனிடையே கடந்த வாரம் ரஷ்யாவின் வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற அதிபர் புதின் தொடர்ந்து இருமி கொண்டு இருந்தார் என்றும் பச்சை ஆடையால் கால்களை மறைத்து இருந்தார் புகைப்பட வீடியோ காட்சிகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Vladimir Mt , Russia, President, Vladimir Putin, Leukemia
× RELATED எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க...