தமிழ் மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும்: பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: சென்னை பல்கலைக்கழக 164வது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, உயரதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார். பின்னர் பேசிய அவர்; இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்; இந்த நாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும். பிரதமர் குறிப்பிட்டது போன்று தமிழ் மிகவும் பழமையான மொழி. தமிழ் இருக்கைகளை பிற மாநில பல்கலைக்கழகங்களிலும் ஏற்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். தமிழ் மொழியை நாடு முழுவதும் உள்ளவர்கள் தெரிந்துகொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு வெளியில் உள்ள பல்கலைக்கழகங்கள் தமிழ் இருக்கை அமைக்க அரசு முன்வர வேண்டும். தமிழ் இலக்கணமும், இலக்கியமும் பாரம்பரியமிக்கது; பழமைவாய்ந்தது. கல்வி, தொழில் மருத்துவ துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் உள்ளது. சென்னை உயர் நீதிமனறத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன். முதலமைச்சர் பேரவையில் அறிவித்தபடி தமிழர்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர்.

இந்தியா கலாச்சாரம், பயன்பாட்டுக்கு மட்டுமின்றி தொழில்துறையிலும் பாரம்பரியம் கொண்டது. காலனி ஆதிக்கம் உருவான 1750களில் இந்தியா மற்றும் சீனாவின் தொழில் துறை உற்பத்தி உலகில் ஒட்டுமொத்த உற்பத்தியில் 73%ஆக இருந்தது. 1,800 களில் இரும்பு உற்பத்தியில் சென்னை மாகாணம் முக்கிய பங்காற்றியது எனவும் கூறினார்.

Related Stories: