கர்நாடகாவில் பொது இடத்தில் பெண் வக்கீலுக்கு சரமாரி அடி - உதை!: முன்பகையால் அண்டை வீட்டுக்காரர் வெறிச்செயல்..அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!!

பகல்கோட்: கர்நாடகாவில் பொது இடத்தில் பெண் வழக்கறிஞரை ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பகல்கோட் மாவட்டத்தில் விநாயக் நகரில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சங்கீதா என்ற பெண் வழக்கறிஞரை அவரது அண்டை வீட்டில் வசிக்கும் மகந்தேஷ் என்பவர் முன்பகை காரணமாக சரமாரியாக தாக்கினார். வழக்கறிஞர் பின்வாங்கியும் கூட விடாமல் சென்று அவர் தாக்கினார்.

வழக்கறிஞரை மகந்தேஷ் அடித்து உதைக்கும் போது சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் கூட தடுக்கவோ, தட்டி கேட்கவோ முன்வராதது கொடூரத்தின் உச்சம். ஆனால் கூடி வேடிக்கை பார்த்தவர்களில் ஒருவர் பதிவு செய்த இந்த வீடியோவே ஆதாரமாக மாற, மகந்தேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில், பொதுவெளியில் பெண் ஒருவரை அடித்து உதைக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related Stories: