×

ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும்: நேட்டோ அமைப்பு அறிவிப்பு

கீவ்: ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி முதல் போர் தொடுத்துள்ளது. கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் மாகாணத்தை பிடித்து தனி நாடாக அறிவிக்க, அது எடுத்து வரும் முயற்சிகளுக்கு உக்ரைன் ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதன் மூலம், ரஷ்ய படைகளின் முன்னேற்றமும், வெற்றியும் தடுக்கப்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நிதி மற்றும் ராணுவ உதவி அளித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்து போரிட உக்ரைனுக்கு ராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பேசிய நேட்டோ அமைப்பு தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்; உக்ரைன் படையினர் தங்களின் தாயகத்தை பாதுகாக்க தைரியமாக போரிட்டு வருகின்றனர். ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில்; “நமது தைரியம் உலகையே ஈர்க்கிறது. நமது இசை, ஐரோப்பாவை வென்றது. அடுத்த ஆண்டு உக்ரைன், யூரோவிஷன் பாடல் போட்டியை நடத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.


Tags : NATO ,Ukraine ,Russia , NATO announces military assistance to Ukraine to continue war against Russia
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...